March 27, 2018
தண்டோரா குழு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டை முன்னிட்டு அதற்கான கொடியை கோவையில் இருந்து இன்று(மார்ச் 27)கொண்டு சென்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு வருகிற 28 ஆம் தேதி முதல் நான்கு தினங்களுக்கு மன்னார்குடியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கான கொடியை கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தியாகிகள் மேடையில் இருந்து இந்திய கம்யூன்ஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் எடுத்து சென்றனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போராட்டங்களில் உயிர் தியாகம் செய்த, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.பின்னர் மாநாட்டிற்கான கொடியை கட்சியினர் வாகனத்தில் எடுத்து சென்றனர்.