May 8, 2020
தண்டோரா குழு
கோவையில் தங்கி வேலை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 1140 பேர் சிறப்பு ரயில் மூலம் பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனா தொற்றால் தொழில்கள் யாவும் முடங்கிவுள்ள சூழலில் வேலை இல்லாமலும் ,சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும் தவித்து வந்த வட மாநிலத் தொழிலாளர்களைக் அந்தந்தத ஊருக்கும் அனுப்பும் பணியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.அந்த வகையில் கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு ,பொள்ளாச்சி ,பேரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கி வேலை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 1140 பேரைக் கோவை மாவட்ட நிர்வாகம் தனது சொந்த செலவில் சிறப்பு ரயில் மூலம் டிக்கெட் எடுத்து கொடுத்து, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
காவலர்கள் உதவியோடு ரயில் நிலையம் அழைத்து வந்து உடல் வெப்பநிலையைக் பரிசோதனை செய்து, 22 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயிலில் தனி மனித இடைவேளியுடன் அமர வைத்து ; உணவு , தண்ணீர், முககவசம் உள்ளிட்ட வசதிகளைக் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.சரியாக 8 மணியளவில் கோவை ரயில் நிலையத்திலிருந்து பீகாருக்கு கிளம்பிய சிறப்பு ரயில் வருகின்ற 10 ஆம் தேதி காலை பீகார் சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.