• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை வேண்டும் – சமூக வலைதளத்தில் டிரெண்டிங்

April 8, 2023 தண்டோரா குழு

கோவையில் இருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் நூற்றுக்கணக்கான பதிவுகள் வெளியாகி டிரெண்ட் ஆகி வருகின்றன.

கோவையில் இருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை துவக்க தொழில்துறையினர் மற்றும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தென்னிந்தியாவில் ஐந்தாவது பெரிய விமான நிலையமான கோவையில் இருந்து தமிழகத்தின் மேற்கு பகுதியில் உள்ள 7 மாவட்ட பயணிகள் மற்றும் கேரளாவை சேர்ந்த 2 மாவட்ட மக்கள் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

தமிழகத்தின் 2-வது பெரிய விமான நிலையமான, கோவை விமான நிலையம் வழியாக ஆண்டுக்கு 30 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். 11 ஆயிரம் டன் சரக்குகள் கையாளப்படுகின்றன. கோவைக்கு சரியான சர்வதேச விமான இணைப்பு கிடைக்காததால் ஆயிரக்கணக்கான பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அத்துடன், நூற்றுக்கணக்கான டன் சரக்குகள் வேறு விமான நிலையங்கள் வழியாக செல்கின்றன. விவசாயம், கல்வி, மருத்துவம், தொழில், ஜவுளி, சுற்றுலா, வர்த்தகம் மற்றும் சேவை துறை உள்பட பல்வேறு துறைகளின் மூலம் ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் கோவை பிராந்தியம் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஏற்கனவே, கோவையில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. விரைவில் இலங்கையில் இருந்தும் விமானங்கள் வர உள்ளன. எனவே, கோவை-துபாய் இடையே நேரடி விமான சேவையை தொடங்குவதின் மூலம் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

இந்நிலையில் கோவையில் இருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் நூற்றுக்கணக்கான பதிவுகள் வெளியாகி டிரெண்ட் ஆகி வருகின்றன.

மேலும் படிக்க