• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இயற்கை பொருட்களை உபயோகிக்க வலியுறுத்தி கண்காட்சி

July 7, 2018

பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் செயற்கை ரசாயன பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து அதற்கு மாற்றாக இயற்கை பொருட்களை பயன்படுத்த வலியுறுத்தி வணிக வளாகத்தில் கண்காட்சி நடைபெற்றது.

கோவை ப்ரூக் பீல்டு சாலையில் உள்ள வணிக வளாகத்தில் இயற்கை பொருட்களை பயன்படுத்துவது குறித்த கண்காட்சி நடைபெற்றது.இந்த கண்காட்சியில் மண்புழு உரம்,வேப்பம் புண்ணாக்கு,தேங்காய் மஞ்சி,மற்றும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஷாம்பூ உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது.

கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன் இந்த கண்காட்சியை பார்வையிட்டார். மேலும் ப்ளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தி பதாகைகளும் வைக்கப்பட்டு இருந்தன.அந்த பதாகைகளை பிடித்து பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என ஆணையாளர் வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருட்கள் குறித்து கண்காட்சியாக வைத்தால் விழிப்புணர்வு ஏற்படும் எனவும்,விரைவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதால் கடைகள்,வணிகர்களுக்கு ப்ளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து நோட்டீஸ் விநியோகித்து,பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று என்ன என்பது குறித்து எடுத்துக் கூறப்படும் எனவும் கூறினார்.

மேலும் படிக்க