• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ‘இப்போ ஃப்ரெஷ்’ என்ற புதிய இறைச்சி விற்பனை நிலையம் துவக்கம் !

December 2, 2021 தண்டோரா குழு

கோவையைச் சேர்ந்த தைத்திருநாள் அக்ரோ புட்ஸ் நிறுவனத்தினர் ‘இப்போ ஃப்ரெஷ்’ என்ற இறைச்சி விற்பனை நிலைய அவுட்லெட்டை துவங்கியுள்ளனர்.

கோவை மாவட்டம் வெள்ளானைப்பட்டியில் தைத்திரு நாள் அக்ரோ புட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கோழி வளர்ப்பில் முன்னணியில் உள்ள இந்த நிறுவனம் மாவட்டத்தில் பல்வேறு நட்சத்திர விடுதிகளுக்கும், பிக்பேஸ்கெட் போன்ற இணைய சந்தைகள் மூலமாகவும் இறைச்சி விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், ‘இப்போ ஃப்ரெஷ்’ என்ற புதிய இறைச்சி விற்பனை நிலையத்தை புலியகுளத்தை அடுத்த ரெட் பீல்ட்ஸ் பகுதியில் துவங்கியுள்ளது.

இதுகுறித்து நிறுவத்தின் நிர்வாக இயக்குனர் சண்முகசுந்தரராஜ் கூறுகையில்,

“பண்ணை கோழி, நாட்டுக் கோழி, பிராய்லர் கோழிகளை நாங்கள் வளர்த்து விற்பனை செய்து வருகிறோம். அதோடு ஆடு, மீன்களையும் விற்பனை செய்கிறோம். ஒரு வருடமாக பிரபல ஓட்டல்களுக்கு விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது எங்களது ரீடெய்ல் அவுட்லெட் துவங்கப்பட்டுள்ளது.

இறைச்சிகளை புஜ்ஜியம் முதல் 4 டிகிரியில் சேமிக்கிறோம். இது ஆரோக்கியமான உணவாக இருக்கும். இது முதல் முயற்சி விரைவில் கோவையில் பல்வேறு கிளைகளை துவங்க உள்ளோம்.” என்றார்.

மேலும் படிக்க