December 29, 2020
கோவையில் இன்று 81 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவையில் ஒரே நாளில் 81 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,155 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றால் இன்று இருவர் உயிரிழந்தார். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 648 ஆக உயர்ந்தது. அதே சமயம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 92 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 50,673 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 834 பேர் இ.எஸ் ஐ மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.