• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 33 பேர் டிஸ்சார்ஜ் !

July 7, 2020 தண்டோரா குழு

கோவையில் இன்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கோவையில் இன்று கோவை மாவட்ட விரைவு நீதிமன்றத்தின் எண் 2 ல் பணியாற்றி வரும், ஆண் நீதிபதி,33 மற்றும் போத்தனுார் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 42 வயது பெண் போலீஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், மரக்கடை, செட்டி வீதி, மசக்காளி பாளையம்,செல்வபுரம், கணபதி, ஆர்.எஸ்.புரம்.,ஜி.என்.மில்ஸ்,காமாட்சிபுரம், நேருநகர்,தெலுங்கு பாளையம்,நாராயணா அவென்யு, பொள்ளாச்சி, பீளமேடு பாலன் நகர் ராயப்பன் வீதி, ஜோதிபுரம், குனியமுத்துார், சுகுணாபுரம்,செல்வபுரம் அய்யப்பா நகர், தெலுங்குபாளையம், கே.கே. புதூர் ஹோப்காலேஜ்,பி.என்.பாளையம், சுங்கம் பை பாஸ், கனியூர், எஸ்.எஸ்.குளம்.,என ஒரே நாளில், ஆண்கள் 25, பெண்கள் 18, சிறுவர், என மொத்தம் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதன்மூலம், கோவை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 839 ஆக உயர்ந்தது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள், கோவை இ.எஸ்.ஐ.,மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்,கோவை, பெ.நா.பாளையம் வாஞ்சி மாநகரை சேர்ந்த 58 வயது ஆண், ஒண்டிப்புதுார் சாஸ்திரி நகரை சேர்ந்த 58 வயது பெண் இருவர் இன்று உயிரிழந்தனர். இதன்மூலம், உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம்இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 15 ஆண்கள், 15 பெண்கள் மற்றும் 3 சிறுமிகள் என மொத்தம் 33 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினர். கோவையில் தற்போது 548 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க