• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இன்னோ வாலி வர்க்ஸ் முதன்மை மையம் திறப்பு

October 6, 2025 தண்டோரா குழு

தொழில்நுட்பத் துறையிலும் திறன் வளர்ச்சியிலும் முன்னணி இன்னோ வாலி வர்க்ஸ், கோயம்புத்தூரில் டாக்டர் என்.ஜி.பி. இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் தனது முதற் மையம் (Center of Excellence) திறப்பை வெற்றிகரமாகக் கொண்டாடியது.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்னோ வாலி வர்க்ஸ் Salesforce Delivery Head மற்றும் நிறுவனர் திலீபன் தங்கவேல் மற்றும் என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் பிரபா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதில், வேல்டெக் யூனிவர்சிட்டி, கற்பகம் யூனிவர்சிட்டி, MCET, ராமகிருஷ்ணா கல்லூரி மற்றும் NGP கல்லூரி ஆகிய முன்னணி கல்வி நிறுவனங்களிலிருந்து 40 திறமையான இன்டர்ன்கள் தொழில்முறை பயணத்தை துவங்கியுள்ளது.

ஒவ்வொரு இன்டர்னுக்கும் மேக் புக் உட்பட பிரீமியம் ஒன்போர்டிங் கிட் வழங்கப்பட்டு, அவர்களின் முதல் நாள் அனுபவத்தை மறக்கமுடியாததாக மாற்றியது.
கல்வியியலும் தொழில்துறையும் இடையேயான இடைவெளியை குறைக்கும் நோக்கில் துவங்கிய இன்னோ வாலி வர்க்ஸ், உலகளாவிய அளவில் நம்பகமான Salesforce பங்குதாரராக வளர்ந்துள்ளது. இந்நிறுவனம் அமெரிக்கா, UK, கனடா, UAE மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சேவைகள் வழங்கி வருகிறது. குறிப்பிடத்தக்கது.

தற்போது சென்னையிலும் அமெரிக்காவிலும் கிளைகள் திறப்பதால், நிறுவன வளர்ச்சியின் வேகம் மற்றும் விரிவாக்க திட்டங்கள் தெளிவாக வெளிப்படுகின்றன.
எதிர்காலத்திற்காக, இனோ வாலி வர்க்ஸ் வரும் ஆண்டில் 250 ஊழியர்களுக்கு மேல் தனது அணியை விரிவுப்படுத்த திட்டமிட்டு உள்ளது, இளம் தொழில்முனைவோர்களுக்கு வாய்ப்புகளை அதிகரித்து, புதுமை மற்றும் திறன் வளர்ச்சியில் முன்னணி நிறுவனமாக திகழும் நோக்கத்தை உறுதி செய்கிறது.

இது குறித்து இன்னோ வாலி வர்க்ஸ் Salesforce Delivery Head மற்றும் நிறுவனர் திலீபன் தங்கவேல் கூறியதாவது:

இன்றைய நாள் அனைவருக்கும் பெருமையும், உற்சாகமும் மிகுந்த நாள் ஆகும். எங்கள் நிறுவனத்தின் முதல் Center of Excellence திறப்பு என்பது ஒரு சாதனை மட்டும் அல்ல — திறன், குழுவீயம் மற்றும் எதிர்காலக் காட்சி ஆகியவற்றை கொண்டாடும் தருணமாகும். 40 இளம் தொழில்முனைவோர்கள் சரியான கருவிகள் மற்றும் வழிகாட்டி உடன் பயணத்தை துவங்குவதை காணும் பொழுது பெருமிதம் உண்டு. சென்னையும் அமெரிக்காவும் உள்ள நமது விரிவாக்கத்துடன், 250 ஊழியர்களுக்கு மேல் வளர்ச்சி திட்டங்களுடன், எதிர்காலம் இன்னும் பிரகாசமாக உள்ளது அதற்கு இதுவே ஆரம்பம் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில்,பெற்றோர்கள், வேலைவாய்ப்பு அதிகாரிகள், மற்றும் தொழில்துறையினர் கலந்து, மாணவர்களின் முதல் நாள் நிகழ்வை நேரில் பார்வையிடினர்.

மேலும் படிக்க