• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இந்த ஆண்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு அதிகரிப்பு

November 16, 2022 தண்டோரா குழு

கோவையில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கி பதிவு செய்வது அதிகரித்துள்ளதாகவும், ஒரே ஆண்டில் 4,253 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அடுத்த படியாக எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவை நகரில் கடந்த 2020-ம் ஆண்டு எலெக்ட்ரிக் வாகனங்களின் பதிவு 1,390 ஆக இருந்தது.

இந்த ஆண்டு இதுவரை 4,253 எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இருசக்கர வாகனங்கள் மட்டும் 3,884, கார்கள் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் 369 ஆகும். இதில் அதிகபட்சமாக கோவை மத்திய பகுதி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மட்டும்1,261 எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அடுத்த ஆண்டு இறுதிவரை சாலை வரி கிடையாது. எனவே வாகன பதிவுகள் அதிகரித்துள்ளன. தற்போது பல்வேறு இடங்களில் பெட்ரோல் பங்குகள், ஓட்டல்களில் சார்ஜ் செய்யும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இ-வாகனம் என்று அழைக்கப்படும் இந்த வாகனங்களுக்கு பச்சை நிறத்தில் நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்படுகிறது.

டீசல், பெட்ரோல் வாகனங்கள் ரூ.10 லட்சத்துக்கு மேல் வாங்கினால் 15 சதவீதம் சாலை வரியும், ரூ.10 லட்சத்துக்குள் வாங்கினால் 10 சதவீதமும் சாலை வரி வசூலிக்கப்படுகிறது என ஆர்.டி.ஒ. அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க