April 22, 2021
தண்டோரா குழு
கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவை கோவையில் 4 ஆயிரம் இருப்பு இருந்தன. 45 ஆயிரம் மருந்துகள் வரவழைக்கப்பட்டு அனைத்து அரசு மருத்துவ மனைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறன.
தடுப்பூசிக்காக 112 மையங்கள் கோவையில் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகின்றன. அரசு தனியார் வளாகங்களில் கொரோனா தடுப்பு மருந்துகள் தரப்படுகின்றன. 319000 தடுப்பூசிகள் இதுவரை கோவையில் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளன.
மையங்கள் தடுப்பூசிகளின்றி மூடப்படுவதாக வெளியான தகவல் தவறென்று குறிப்பிட்டிருக்கின்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் அரசு மையங்கள் முழுமையாக செயல்படுவதாகவும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பு மருந்துகளில்லாமல் இருக்கலாமென தெரிவித்திருக்கின்றன.