May 25, 2021
தண்டோரா குழு
கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள ஆவின் பாலக அலுவலகத்தை பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர் ஆய்வு செய்தார்.
ஊரடங்கு காலத்தில் பால் பொருட்கள் பொதுமக்களுக்கு வீட்டின் அருகே கிடைக்கும் விதமாக ஆவின் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதை பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர் இன்று ஆய்வு செய்தார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத் துறை அமைச்சர் நாசர்,
தமிழகம் முழுவதும் நோய்த்தொற்றை சங்கிலித்தொடரை அழிக்க வேண்டும் என முனைப்புடன் முதல்வர் அமைச்சர்கள் செயல்பட்டுக் கொண்டு வருகிறோம்.தமிழகம் முழுவதும் அடிப்படைத் தேவைகளான பால் மருத்துவ பொருட்கள் தங்கு தடையின்றி பொது மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்து வருகிறோம்.
பாலை முழுமையாகப் பெற்று அந்தப் பாலை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் தாம்பரம் அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம்.தற்போது திருப்பூர் கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதி ஆவின் நிறுவனங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.