• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது

November 1, 2022 தண்டோரா குழு

சென்னை வள்ளுவர் கோட்டத்தில், பாஜக மகளிர் அணி நிர்வாகிகளை அவதூறாக பேசிய திமுகவினரை கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மற்றும் 300க்கும் மேற்பட்ட பாஜக மகளிர் அணி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதற்கிடையில்அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மகளிர் அணி உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில்,அண்ணாமலை கைது
செய்யப்பட்டதை கண்டித்து கோவை சித்தாபுதூரிலுள்ள பாஜக அலுவலகத்தில் இருந்து காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு பேரணியாக சென்று பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க