• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆயுர்வேத சிகிச்சை மையத்துடன் இணைந்த முதல் சித்தா கோவிட் சிகிச்சை மையம் துவக்கம்

June 9, 2021 தண்டோரா குழு

கோவையில் ஆயுர்வேத சிகிச்சை மையத்துடன் இணைந்த முதல் சித்தா கோவிட் சிகிச்சை மையம் துவங்கப்பட்டது.

உலகையே உலுக்கி வரும் கோவிட் பெருந்தொற்றுக்கு சித்த மருத்துவ நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் வியப்பூட்டும் வகையில் பலன் அளித்து வருகின்றன.
இதையடுத்து, அரசு சார்பிலேயே சித்த மருத்துவ மையங்கள் தொடங்கப்பட்டு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கபட்டு வருகின்றன.

இந்நிலையில்,கோவையில்,கொங்கன் சித்தர் மருத்துவமனை மற்றும் சாய்கிராம் ஆயுர்வேத மருத்துவமனை ஆகியவை இணைந்து ஆயுஷ் கோவிட் சிகிச்சை மையத்தை துவங்கியுள்ளனர். இதற்கான துவக்க விழாவில் பெரிய நாயக்கன்பாளையம் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்தார்.

இந்த மையத்தில்,.ஆச்சிஜன் ஆதரவுக் கருவிகள்,படுக்கைகள், மருந்துகள், சிகிச்சை முறைகள் மற்றும் அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்கள்,செவிலியர்கள், பணியாளர்களுடன் இம்மையம் செயல்பட உள்ளதாக,கொங்கன் சித்தர் மருத்துவமனையின் நிறுவனர் பண்டிட். ஸ்டீஃபன் சந்திரசேகரன் தெரிவித்தார்.

விழாவில் சித்தா மருத்துவர்கள், தீனதயாளன்,
ஸ்ரீனிவாசன்,சதீஷ்குமார்,போஸ் பிரியன் ,சுபாஷினி மற்றும் சாய்கிராம் மருத்திவமனையின் தலைவர் ரவீந்திரன் சி.இ.ஓ.ராஜேந்திர பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க