• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் அடுத்தது நிகழும் தற்கொலைகள்

November 3, 2020 தண்டோரா குழு

கோவை தொண்டாமுத்தூர் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த ஜீவானந்தம்(28) ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த ஜீவானந்தம்(28). இவர் நண்பருடன் இணைந்து கம்ப்யூட்டர் சேல்ஸ் & சர்வீஸ் செய்து வருவதாகவும், நண்பருக்கு கொடுக்க வைத்திருந்த 50 ஆயிரத்தில் 20 ரூபாய் ஆன்லைனில் விளையாடி ஏமாந்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தவிர்க்ககோரி கடந்த 15 நாட்களுக்கு முன்பு மனைவி கண்டித்துள்ளார். ஆனால் அதையும் மீறி விளையாடியதால் கோவித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். இவர் பல வருடமாக ஆன்லைனில் ரம்மி விளையாடி வருவதாகவும், நேற்றைய தினம் 20 ஆயிரம் ரூபாய் இழந்தை அடுத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவையில் இதுவரை ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இதுவரை 3 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க