October 31, 2020
தண்டோரா குழு
கோவையில் ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட நஷ்டத்தால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த மதன்குமார்(28).இவர் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் பணம்கட்டி விளையாடுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,இன்று மதங்குமார் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணையில் ஆன்லைன் விளையாட்டில் கட்டிய பணத்தை இழந்த மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து,ஆர்.எஸ்.புரம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த பத்து நாட்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.