• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஆட்டோக்களை கையால் இழுத்து தமுமுகவினர் நூதன முறையில் போராட்டம்

February 23, 2021 தண்டோரா குழு

கோவையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் யாசித்துப் ஆடைகட்டி ஆட்டோக்களை கையால் இழுத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

நாடு முழுவதும் விலை அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் மற்றும் தொழில் துறையினர் போக்குவரத்து துறையினர் என பல்வேறு துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொழிற்சங்க பிரிவு சார்பில் கோவையில் செஞ்சிலுவை சங்க முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது இருந்த கச்சா எண்ணெயின் விலை இதைவிட தற்பொழுது பேரலுக்கு ரூபாய் என குறைந்துள்ள நிலையில் மத்திய மாநில அரசுகளின் அதிகமான வரிவிதிப்பின் காரணமாக பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாது கேஸ் விலையும் அதிகரித்துள்ளது.

இதனால் பல்வேறு துறையினர் மற்றும் சமையல் கேஸ் பயன்படுத்தும் பெண்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு அதன் வரி விதிப்பு குறைக்காமல் இருப்பது முறையல்ல எனவும் இதனால் பல்வேறு பாதிப்புகள் உள்ளதாகவும் தெரிவித்த தமுமுகவினர் மத்திய மாநில அரசுகள் விரைவான நடவடிக்கை எடுத்து இதன் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர். முன்னதாக கேஸ் இருக்கு பாடை கட்டியும் மலர் தூவியும் ஆட்டோக்களை கையெழுத்தும் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க