கோவையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
கொரொனா தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் கேளிக்கை விடுதிகள், நட்சத்திர விடுதிகள் மற்றும் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டது. வழிபாட்டு தலங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் கோவை டவுண்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் இரவு நேர சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்த பிராத்தனை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். கொட்டும் பனியில் தேவாலயத்தின் வெளிப்புற பகுதியிலும் ஏராளமான மக்கள் அமர்ந்து சிறப்பு திருப்பலி நிகழ்வில் கலந்து கொண்டனர். கொரொனா தொற்று கடந்த காலத்தில் ஏற்படுத்திய பாதிப்பை போன்று இல்லாமல் நிம்மதியான ஆண்டாக இந்த அமைய வேண்டும் என சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டவர்கள் பிராத்தனையில் ஈடுபட்டனர்.
மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், நகரின் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.இரவு நேரத்தில் வேகமாக வாகனத்தில் சுற்றித் திரிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.முக்கிய சாலைகள் அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்