• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ரூ.5.10 கோடி மதிப்பிலான கோவில் சொத்து மீட்பு

November 17, 2022 தண்டோரா குழு

கோவை கோட்டைமேடு பெருமாள் கோவில் வீதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ரூ.5.10 கோடி கோவில் சொத்தை இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மீட்டனர்.

கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 5.10 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வணிக கட்டடத்தை, இருபது ஆண்டுகளுக்கு பின், இந்து சமய அறநிலையத்துறை மீட்டுள்ளது.கோவை தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட, சர்வே எண் 1309/2 கொண்ட,கோட்டை மேட்டிலுள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான வணிக கட்டடம் கோட்டை பெருமாள் கோவில் வீதி, கதவு எண்212, பிளாக் 22ல் 2, 931 ச.அடியில் இருந்தது.

இந்த வணிக கட்டடம், பாலசுப்ரமணியம் என்பவரது பெயரில் குத்தகைக்கு எடுக்கப்பட்டு மூன்றாம் நபர் பயன்படுத்தி வந்தது, அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது. இதற்கான வாடகை உள்ளிட்ட குத்தகை, 20ஆண்டுகளாக செலுத்தப்படவில்லை.
இது தொடர்பான வழக்கு, கோவை மண்டல இந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் கோர்ட்டிலும், கோவை மாவட்ட கோர்ட்டிலும் நடந்தது. அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு சொந்த மான வணிக கட்டடத்தை கையகப்படுத்தி, சீல் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.

கோவில் செயல் அலுவலர் சரவணக்குமார், தக்கார் செல்வம் பெரிய சாமி, அறநிலையத்துறை ஆய்வாளர்கள் ராம்குமார் மற்றும் சரண்யா,கோவில் மற்றும் அறநிலையத்துறைபணியாளர்கள், போலீசார் மற்றும் வருவாய்த்துறை யினர் இணைந்து, வணிக கட்டடத்தை கோவில் வசம் கொண்டு வந்தனர்.

இது குறித்து செயல் அலுவலர் சரவணக்குமார் கூறுகையில்,

“கோர்ட் வணிக கட்டடம் காலி வசம் செய்து, கோவில் சுவாதீனம் கொண்டு வரப் மீட்கப்பட்டபட்டது. இக்கோவிலுக்கு சொந்தமான வணிக கட்டடத்தின் இன்றைய சந்தை மதிப்பு சுமார், 5 கோடியே 10 லட்சம் ரூபாய்,” என்றார்.

மேலும் படிக்க