• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அவுட்டுக்காய் எனும் நாட்டு வெடியை கடித்த 6 வயது பெண் யானை உயிரிழப்பு

September 5, 2023 தண்டோரா குழு

கோவை வனச்சரகம், துடியலூர் பிரிவு, தடாகம் வடக்கு சுற்று எல்லைக்குட்பட்ட 11.வீரபாண்டி அருகில் களப்பணியாளர்கள் ரோந்து பணியின்போது காட்டு யானை ஒன்று படுத்துகிடப்பது கண்டறியபட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டது.

இதில் வனக்கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்யப்பட்டதில் அதன் வாயில் காயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.அவுட்காயால் காயம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவரால் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இது தொடர்பாக வனக்குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வனத்துறை மோப்ப நாய் உதவியுடன் களப்பணியாளர்கள் இணைந்து சந்தேகத்திற்கிடமான இடங்களில் சோதனை மேற்கொள்ளபட்டு வருகிறது.

மேலும் படிக்க