• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அரிவாள் மற்றும் ஆயுதங்களுடன் காரில் வந்த 6 பேரிடம் போலீசார் விசாரணை

March 16, 2020 தண்டோரா குழு

கோவையில் தற்போது இஸ்லாம் மற்றும் இந்து அமைப்புகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதனால் கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர வாகன சோதனையிம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு கோவை நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சென்னை பதிவு எண் கொண்ட குவாலிஸ் காரை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் கத்தி மற்றும் அரிவாள்கள் இருந்துள்ளன. அதனை தொடர்ந்து கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் நடத்திய விசாரணையில் காரில் வந்த மதுரையை சேர்ந்த பழனிகுமார், வீரசுபாஷ், சுரேஷ்குமார்,மனோபாலா, மணிகண்டன்,கார்த்தி என்பது தெரியவந்தது.

மேலும், அவர்கள் 6 பேரும் ஏற்கனவே மதுரையில் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளி வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.ஏற்கனவே கேரளாவில் இருந்து ஒரு சிலர் மத தலைவர்களை தாக்கும் எண்ணத்தில் கோவை வந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கோவையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிடிப்பட்டுள்ள 6 பேரும் அது போன்ற திட்டத்துடன் கோவை வந்துள்ளனரா அல்லது கொலை வழக்கில் ஜாமினில் வெளி வந்துள்ளதால், தங்கள் பாதுகாப்பிற்காக ஆயுதங்களுடன் வந்துள்ளார்களா, அல்லது கூலிப்படையை சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க