April 2, 2020
தண்டோரா குழு
கோவை மதுக்கரை அருகே அரசு உத்தரவை மீறி பொதுமக்களை கடையில் அமர வைத்து உணவளித்த தனியார் உணவகத்திற்கு பேரூராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை அமலில் உள்ளது. மேலும் தொற்று பரவாமல் தடுக்கவும்,பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க உணவகங்களில் பார்சல் மட்டுமே வாங்கி செல்ல அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களை உணவகங்களில் அமர வைத்து உணவளிக்க கூடாது என உணவகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் கோவை மதுக்கரை குரும்பபாளையம் அருகே செயல்பட்டு வந்த ஸ்ரீ அம்மன் உணவகத்தில் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதியளித்தால் உணவகத்திற்கு மதுக்கரை பேரூராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஏற்கனவே எச்சரித்த நிலையில் அரசு உத்தரவை மீறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.