April 14, 2020
தண்டோரா குழு
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அன்னாரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 129-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது.இந்திய அளவிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள்,அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்புறம் வைக்கப்பட்டிருந்த அன்னாரது திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தனி மனித விலகலை கடை பிடித்த நடைபெற்ற இதில் அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியர் வளாக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.