February 28, 2018
தண்டோரா குழு
கோவை மாலிக்குலள் டயோக்னோஸ்டிக் கவுன்சிலிங் கேர் அன்ட் ரிசர்ச் சென்டர் சார்பில் தசை கோளாறு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (பிப் 28)நடைப்பெற்றது.
உலக அபூர்வ நோய் தினம் ஆண்டு தோறும் பிப்ரவரி 28 ம்தேதி அனுசரிக்கப்படுகிறது.இதனையொட்டி கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மற்றும் ஜெயந்திர சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியுடன் இணைந்து கோவை மாநகரில் உள்ள 7 போக்குவரத்து சிக்னல்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது.
கோவை அவிநாசி ரோடு உப்பிலிபாளையம் சிக்னலில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.ஒரு சிக்னலுக்கு தலா 20 பேர் வீதம் மொத்தம் 160 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
இத்தகைய தசைக்கோளாரு ஆண் குழந்தைகளை மட்டுமே பாதிக்கிறது.உலக புள்ளிவிபரப்படி தமிழகத்தில் குறிப்பிடத்தக்க குழந்தைகள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான உரிமை மற்றும் உதவிகள் பற்றி தெரிந்து கொள்வதற்காகவே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நோயினால் பாதிக்கப்படும் ஆண் குழந்தைகள் முதலில் உடலியக்க செயல்பாடு குறைந்து பின்னர் அடிமையாகின்றனர். இந்த தசை கோளாறு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் அடிக்கடி விழுதல், கீழே உட்கார்ந்து எழுவதில் சிரமம், கால் விரலால் நடத்தல்,கெண்டை தசை பிடிப்பு, படிக்கட்டில் ஏறுவதில் சிரமம், மெதுவான நடை.
மேலும்,வருகின்ற 2020 ம்ஆண்டு எந்த குழந்தையும் தசைக்கோளாறு நோயால் பாதிக்கப்படவில்லை என்ற இலக்கே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கமாகும்.