• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் கூகுள் மேப் உடன் இணைப்பு

December 13, 2019

கோவையில் அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் கூகுள் மேப் உடன் இணைக்கும் பணி நடக்கிறது.

கோவையில் பயன்பாட்டில் உள்ள 900 கண்காணிப்பு கேமராக்களை கூகுள் மேப் இணைக்கும் பணி நடந்து வருகிறது. குற்ற வழக்குகள் போக்குவரத்து விதி மீறல்களை கண்டறிவதும் எளிதாகிறது.

கோவையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய அனைத்து போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப் பட்டிருக்கிறது. இதன் வாயிலாக நகரில் உள்ள அனைத்து பகுதியில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் போலீசார் கண்காணிக்க முடியும் கட்டமைப்பு மூலம் வரும் காலங்களில் டிஜிட்டல் ஆதாரத்துடன் வழக்கு விசாரணை மேற்கொள்ள முடியும். அடுத்த கட்டமாக அனைத்து கேமராக்களையும் கூகுள் மேப் இணைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

தற்போதைய நிலையில் மாநகர பகுதியில் மட்டும் 50,000 கேமரா கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன. இதனால் குற்றச்செயல்கள் குறைகின்றன போக்குவரத்து விதிமீறல்கள் குறைந்திருக்கின்றன அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு உள்ளன. கூகுள் மேப் இணைக்கும் பணி நடக்கிறது. கண்காணிப்பு கேமரா மூலம் விதிமீறல் வாகன ஓட்டிகள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது இதுவரை ஒன்றரை லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் வியாபாரிகள் கண்காணிப்பு கேமரா பொருத்த முன்வர வேண்டும்.

மேலும் படிக்க