• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

November 15, 2019 தண்டோரா குழு

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை கண்டித்து, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை கண்டித்து, பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு அவ்வமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாபர் மசூதியை இடிப்பு வழக்கில் ராமர் கோவில் கட்ட அனுமதியளித்து இருப்பது நியாயமற்றது எனவும், இவ்வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

மேலும் பாபர் மசூதியை இடித்தது குற்றமென உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ளதால், இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க