• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் அந்நிய பொருட்களை உடைத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வணிகர் சங்கத்தினர்

January 1, 2019 தண்டோரா குழு

ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து ,அந்நிய பொருட்களை உடைத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வணிகர் சங்கத்தினர்.

மத்திய அரசு அனைத்து துறைகளிலும் ஆன் லைன் வர்த்தகத்தை ஊக்குவித்து வருகிறது. சில்லறை வணிகத்தில் 100% அன்னிய முதலீடு, சுய தொழில் மீதான தாக்குதல்,உணவு பொருட்களுக்கு தர கட்டுப்பாடு போனற்வை சில்லறை வணிகத்தை நசுக்கிவருகிறது. உள்நாட்டு வர்த்தகத்தை முற்றிலும் பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி , தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் தெற்கு வாட்டாட்சியர் அலுவலகம் அருகே அந்நிய பொருட்களை உடைத்தும்,மிதித்தும், குளிர்பானங்களை கீழே ஊற்றியும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்நிய பொருட்களை புறக்கணிக்க கோரியும் கோக், பெப்சியால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போனதாக கூறியும் ஆன்லைன் வர்த்தகத்தால்,
சுயதொழில் விற்பனை நலிவடைந்ததாகவும், வணிகர்களை காத்திட முடியாத வக்கற்ற மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோசங்களை எழுப்பினர். அந்திய வர்த்தகத்திற்கு எதிரான இரண்டாம் சுதந்திரப்போராக அந்நியபொருட்களை தீக்கிரையாக்குவோம் என்பதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முன்னெடுத்துள்ளதாக வெள்ளையன் தெரிவித்தார்.

மேலும் இன்று கோவையில் தொடங்கி ஜனவரி 6 ஆம் தேதி வரை தமிழகத்தின் ஆறு முக்கிய நகரங்களில் அந்நிய பொருட்களை தீக்கிரையாக்கும் போராட்டம் தொடர இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க