• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அதுல்யா சீனியர் கேர் மையம் திறப்பு !

August 30, 2023 தண்டோரா குழு

கோவை மேட்டுப் பாளையம் சாலையில் அதுல்யா சீனியர் கேர் மையம் என்ற பெயரில் மூத்தகுடி மக்களுக்கான ப்ரீமியம்குடியிருப்பு வளாகம் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

விழாவில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்,மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அதுல்யா சீனியர் கேர் மையத்தை திறந்து வைத்தார்கள்.

விழாவில் கோவை அதுல்யா சீனியர் கேர் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் கார்த்திக் நாராயணன்,தலைமை செயல் அதிகாரி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்று பேசினார்கள்.

பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

70,000 சதுரஅடி என்ற மிகப்பெரிய நிலப்பரப்பில் அமைந்திருக்கும் கோவையின் இந்த புதிய அதுல்யா சீனியர் கேர் வளாகம், வயது முதிர்ந்த நபர்களுக்கு உயர்தர பராமரிப்பையும், சௌகரியத்தையும் வழங்குவதில் அதுல்யா கொண்டிருக்கும் பொறுப்புறுதிக்கு நேர்த்தியான சாட்சியமாக திகழ்கிறது.

இவ்வளாகத்தில் மொத்தத்தில் 100 படுக்கை வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன. குடியிருப்பாளர்களுக்கு விசாலமான மற்றும் சௌகரியமான வாழ்விட வசதியை வழங்கும் வகையில் இது ஒவ்வொன்றும் மிக கவனத்தோடும், நேர்த்தி யோடும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நாம் வசிக்கும் அமைவிடம் நம்முடையது என்ற உணர்வையும், அந்தரங்க பாதுகாப்பையும் மற்றும் நம் சொந்த வீட்டில் இருப்பது போன்ற சூழலையும் பேணி வளர்க்கும் நோக்கத்தோடு இவ்வளாகத்தில் உள்ள ஒவ்வொரு அமைவிட வசதியும் மிக கவனமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாராத இரு பிரிவுகள் உட்பட, மொத்தத்தில் ஏறக்குறைய 200 பணியாளர்கள் அடங்கிய குழு, அதுல்யா சீனியர் கேர் வளாகத்தில் செயல்படுகிறது.இங்கு வசிக்கும் மக்களுக்கு, அதுவும் குறிப்பாக முதியோர்களுக்கு 24 மணி நேரமும் மருத்துவ பராமரிப்பும், தனிப்பட்ட கவனிப்பும், கனிவுள்ள தோழமை உணர்வும் கிடைப்பதை சிறப்பான, பயிற்சியளிக்கப்பட்ட இப்பணியாளர்கள் குழு உறுதி செய்யும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் படிக்க