March 26, 2021
தண்டோரா குழு
கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஜெயராமின் புகைப்படம் பதித்த டி-ஷர்ட், பிளாஸ்டிக் இரட்டை இலை சின்னம், நோட்டீஸ் மற்றும் அட்டை பதாகைகள் ஏற்றி வந்த ஆட்டோவை தண்ணீர் பந்தல் அருகே பறக்கும் படையினர் பிடித்து ஆவணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது வாகனத்தில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில்கள் அளித்ததால் அதிகாரிகள் ஆட்டோவை கோவை தெற்கு அலுவலத்திற்கு எடுத்து வந்து வாகனத்தில் இருந்து பொருட்களை இறக்கி ஆவணங்களை சோதித்த போது நோட்டீஸ், டீ-சர்ட், அதிமுக கொடிகள் உள்ளிட்டவை மற்றும் ஆவணங்கள் இருந்ததால் அதை ஒப்படைத்தனர்.
பின்னர் 1500 பிளாஸ்டிக் இரட்டை இலைகள், மற்றும் இரட்டை இலை அட்டை பதாகைகளுக்கு அனுமதி கடிதம் ஆவணமும் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்து அலுவலகத்தில் வைத்தனர்.