• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அதிமுக உறுப்பினர்கள் மீது குறித்து பொய் வழக்கு போடுகிறார்கள் – எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு !

June 8, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் 25 ஆக்சிசன் செரி வூட்டிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என
கூறினார்.

கோவை ஆட்சியர் நாகராஜனை சந்தித்து முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மற்றும் கோவை மாவட்ட எம்எல்ஏக்கள் ஒன்றாக இணைந்து 25 லட்ச ரூபாய் மதிப்பிலான 25 ஆக்சிசன் செரிகளை வழங்கினர். பிறகு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அதன்பிறகு எஸ். பி. வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இன்றி எல்லா சூழ்நிலையிலும் பொதுமக்களை சந்தித்து தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறோம். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதியிலும் அதிமுக எம்எல்ஏக்களை தொடர்ந்து பொதுமக்கள் தொடர்பு கொண்டு தொகுதியில் உள்ள குறைகள் மற்றும் கொரோனா பாதிப்பு குறித்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஆதலால் கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டம் சார்பாகவும் அதிமுக சார்பாகவும் இன்று மாவட்ட ஆட்சியர் நாகராஜனை சந்தித்து நோயாளிகள் பயன்பெறும் வகையில் 25 ஆக்சிசன் செரிவூட்டிகளை வழங்கியுள்ளோம். இதை உடனடியாக நோயாளிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் வைத்துள்ளோம்.

தொடர்ந்து கோவை மாவட்டத்தில் அதிமுக உறுப்பினர்களை குறிவைத்து திமுக அரசாங்கம் பொய் வழக்குகளை பதிவு செய்து வருகிறது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சி ஆன செயலாகும். பொய் வழக்குகளை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். பொய் வழக்கு போடப்பட்டவர்கள் மீது வழக்கை வாபஸ் பெற வேண்டும்.

கோவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உதவிகள் செய்யும் போது தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் அதிகமான கொரோனா நோயாளிகள் காணப்படுகின்றன. ஆதலால் போர்க்கால அடிப்படையில் கோவை மாவட்டத்திற்கு சிறப்பு கவனத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.தொடர்ந்து நாங்கள் பொது மக்களுக்காக மக்கள் பணி ஆற்றுவோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தலைமையில் ஐ.ஜி. சுதாகர் அவர்களை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.

மேலும் படிக்க