• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் அதிக விலைக்கு மது விற்பனை – டாஸ்மாக் கடை ஊழியர்களுடன் மது பிரியர்கள் வாக்குவாதம்

May 19, 2020 தண்டோரா குழு

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக மது பிரியர்கள் டாஸ்மாக் கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா அச்சத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மது பானங்கள் விலை ரூ.10 ல் இருந்து ரூ.30 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை (2229) ல், அரசு நிர்ணயம் விலை உயர்வுடன் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதாக மது பிரியவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அங்கிருந்த மது பிரியர்கள் கூறும் போது,

நாங்கள் கூலி வேலை செய்வதால் உடல் வலியை தவிர்க்க மது குடிக்கிறோம்.ஏற்கனவே அரசு அறிவித்த விலை உயர்வு பரவாயில்லை ஆனால் கூடுதலாக ரூ.30 சேர்த்து டாஸ்மாக் கடையில் விற்பனை செய்கிறார்கள்.இது குறித்து கேட்டால் வெளியே போ என மிரட்டுகிறார்கள். டோக்கன் வாங்கி மது வாங்க செல்வதால் அங்கு ஊழியர்களிடம் இது குறித்து கேட்கவிடாமல் விரட்டுகிறார்கள் என தெரிவித்தார்.

இது குறித்து மலுமிச்சம்பட்டி டாஸ்மாக் மேற்பார்வையாளர் நாகராஜ் கூறும்போது அரசு நிர்ணயம் செய்த விலையில் தான் மது விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

மேலும் படிக்க