• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அதிகாலை 4 மணி முதலே திரையரங்குகளுக்கு முன்பு குவிந்த சிம்பு ரசிகர்கள்

November 25, 2021 தண்டோரா குழு

கோவையில் நடிகர் சிலம்பரசன் நடித்த “மாநாடு” திரைப்படம் 5 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலை 8 மணிக்கு படம் திரையிடப்பட்டது. ரசிகர்கள் நீண்ட நேரம் காத்திருந்து படத்தை பார்த்து வருகின்றனர்.

நடிகர் சிலம்பரசன் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படம் இன்று காலை 5 மணிக்கு ஙெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.’மாநாடு’ படத்தின் ரிலீஸ் பல முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் , அனைத்து தடைகளும் சரிசெய்யப்பட்டதால் படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

கோவையில் அதிகாலை 4 மணி முதலே திரையரங்குகளுக்கு முன்பு சிம்பு ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி 5 மணிக்கு படம் திரையிடப்படவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.ஆனாலும் திரையரங்குகள் முன்பாக தொடர்ச்சியாக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் 7:40 மணிக்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 8 மணிக்கு படம் திரையிடப்பட்டது.

அதிகாலை முதல் நீண்ட நேரம் திரையரங்கு வாசலில் காத்திருந்து சிம்பு ரசிகர்கள் மாநாடு படத்தை பார்த்து வருகின்றனர்.

மேலும் படிக்க