February 22, 2018
தண்டோரா குழு
கோவையில் அகஸ்தியா இண்டர்நேஷனல் பவுண்டேசன் & டீம் இண்டஸ் சார்பாக l& T அறிவியல் மையத்தில் கண்காட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்ட கல்வி அலுவலர் கீதா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர் கண்ணன், அரசு கல்வியியல் கல்லூரி முதல்வர் இந்திராணி, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் ரவீந்திரன், தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்,இந்த கண்காட்சி மூலம் வானியல் அறிவியலை மாணவர்களும், பொதுமக்களும் எளிதாகவும்,நேரடியாகவும் புரிந்து கொள்கின்றனர்.
மேலும், மூன் சூட் வானத்தின் மூலமாக நிலவின் அமைப்பை பார்த்து மாணவர்கள் வியந்தனர். இந்நிகழ்வில் பங்கேற்றதில் வரும் காலத்தில் வானியல் துறையில் அரசு பள்ளி மாணவர்களும் பங்கேற்க தன்னம்பிக்கை கிடைத்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர். அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் எவ்வித கட்டணமும் இல்லாமல் இந்நிகழ்வு காண்பிக்கப்பட்டு வருகிறது.