கோவையில் ஃபேஷன் ஸ்பெக்ட்ரா 2022 எனும் தலைப்பில் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில் மாடல் பெண்களுடன் குழந்தைகளும் கலந்து கொண்டு, ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.
கோவையில் Zetra ஜெட்ரா ஃபேஷன் நிறுவனத்தை நடத்தி வரும் இளைஞர் ஷேக் முகம்மது மாடல் பேஷன் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார்.கட்டுமான துறை சார்ந்த ஆர்க்கிடெக்ட் பட்ட படிப்பு படித்து வரும் இவர்,பேஷன் மீது கொண்ட ஆர்வத்தால், தொடர்ந்து பேஷன் துறையில் சாதிக்க விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறார்.
இந்நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள கோகுலம் பார்க் ஒட்டல் வளாகத்தில், ஃபேஷன் ஸ்பெக்ட்ரா 2022 எனும் பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பிரபல தனியார் தொலைக்காட்சி தயாரிப்பு நிர்வாகம் செய்து வரும் இரட்டையர்கள் அருண் அரவிந்த் ஆகியோர் பங்கு பெற்றனர் .சிறப்பு விருந்தினர்களாக ஜே.ஆர்.டி.ராஜேந்திரன் மற்றும் தீபக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடுவர்களாக பிரபல மாடல் சுபா நந்தினி,தொகுப்பாளர் மற்றும் நடிகையான வி.ஜே.கல்யாணி ஆகியோர் கலந்து கொண்டனர். பெண்கள்,குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்ட பேஷன் ஷோ நிகழ்ச்சியில், குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை விதவிதமான ஆடை அணிந்து வலம் வந்தனர்.
குறிப்பாக இதில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியரும், வித விதமான வண்ண ஆடைகள் அணிந்த படி மேடையில் ஒய்யார நடை நடந்தனர். முன்னனி மாடல் பெண்களுடன் போட்டி போட்டபடி நடந்த குழந்தை மாடல்களை பார்வையாளர்கள் கைகளை தட்டி உற்சாகபடுத்தினர்.இறுதியில் அனைவருக்கும் நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு