• Download mobile app
06 Jan 2026, TuesdayEdition - 3618
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஃபிக்கி ஃப்ளோ சார்பில் ‘ஃப்ளோ கேலரியா’ ஃபேஷன் மற்றும் லைஃப் ஸ்டைல் கண்காட்சி இன்று துவங்கியது

January 5, 2026 தண்டோரா குழு

ஃபிக்கி ஃப்ளோ கோயமுத்தூர் (இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை அமைப்பின் மகளிர் பிரிவான பிக்கி புளோ) சார்பில் ‘ஃப்ளோ கேலரியா’ என்ற ஆடம்பர ஃபேஷன் மற்றும் லைப் ஸ்டைல் கண்காட்சி கோவையில் இன்று துவங்கியது. ஜனவரி 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு கோவையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸ் – தி பால்ரூம் அரங்கில் இந்தக் கண்காட்சி துவக்கப்பட்டது.

பெண்களால் நடத்தப்படும் தொழில்முனைவுகளை ஊக்குவிக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஃப்ளோ கேலரியாவில், நாடு முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் நகை வியாபாரிகளின் பிரத்யேக அரங்குகள் இடம் பெற்றுள்ளன. உயர்தர ஆடைகள், நேர்த்தியான நகைகள், துணைப் பொருட்கள் மற்றும் நவீன வாழ்க்கை முறை சார்ந்த தயாரிப்புகள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள ‘புரொமனேட்’ பகுதியில் உணவு, கலை, கைவினைப் பொருட்கள் மற்றும் நிலையான வாழ்க்கை முறை தயாரிப்புகளை வழங்கும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொறுப்பான நுகர்வு மற்றும் சமூகத்தை மையமாகக் கொண்ட தொழில்முனைவுகளை வளர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். ஃப்ளோ கேலரியா மற்றும் புரொமனேட் ஆகிய இரு பகுதிகளிலும் மொத்தம் 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

நிகழ்வில் பேசிய ஃபிக்கி ஃப்ளோ அமைப்பின் கோவை தலைவர் டாக்டர் அபர்ணா சுங்கு,

“ஃப்ளோ கேலரியா என்பது ஆடம்பரக் கண்காட்சி மட்டுமல்ல; வணிகமும் சமூக நோக்கமும் இணையும் ஒரு பயனுள்ள தளமாகும். இந்த நிகழ்வின் மூலம் கிடைக்கும் வருமானம் அடித்தட்டு நிலையில் உள்ள பெண்களின் திறன் மேம்பாடு, தொழில்முனைவு மற்றும் நிலையான வாழ்வாதாரங்களை மேம்படுத்த பயன்படுத்தப்படும்,” என்று தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் ப்ரீத்திகா பாலாஜி தலைமையில் ஃபிக்கி ஃப்ளோ கோவை செயற்குழு மற்றும் கேலரியா குழுவினரால் நடத்தப்படுகிறது. அனுபவமும் தொலைநோக்கு பார்வையும் கொண்ட வனஜா ராம்ராஜின் வழிகாட்டுதலுடன் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.

மேலும், ஜெய்ப்பூர் ஜெம்ஸ் முதன்மை ஆதரவாளராகவும், ஆர்.யூ.எச். எர்லி இயர்ஸ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம். குழுமம் ஆகியவை இணை ஆதரவாளர்களாகவும் செயல்படுகின்றன.

ஆடம்பரம், படைப்பாற்றல் மற்றும் சமூக தாக்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வெளிப்பாடாக ஃப்ளோ கேலரியா திகழ்கிறது. பெண்தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், பொதுமக்களுக்கு மேம்பட்ட வாழ்க்கை முறை சார்ந்த ஷாப்பிங் அனுபவத்தையும் இந்தக் கண்காட்சி வழங்குகிறது.

மேலும் படிக்க