March 2, 2018
தண்டோரா குழு
கோவையில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் முன்னேற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் தனியார் கல்லூரி சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
மகளிர் தினம் வருகிற மார்ச் எட்டாம் தேதி கொண்டாடப்படுகிறது.இத்தினத்தை முன்னிட்டு பெண்கள் ஒவ்வொரு துறையிலும் எந்த அளவிற்கு சாதித்து உள்ளனர் என்பதனையும், பெண்களின் முன்னேற்றத்தையும் அடையாளபடுத்தும் வகையில் அவர்களுக்காக கோவையில் உள்ள ஸ்ரீசக்தி இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பெண்கள் கரடுமுரடான பாதைகளில் ஜீப் ஒட்டி சென்றனர். அதே போல மேடு பள்ளங்களில் தண்ணீர் உள்ள இடங்ளிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக காரை ஒட்டி சென்றனர். இந்த நிகழ்ச்சி காண்போரை வெகுவாக கவர்ந்தது. அதே போல சூலூர் குளத்தில் படகுகளை இயக்குவது, குதிரையில் ஏறி ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் பெண்கள் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.