• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையிலுள்ள தனியார் வணிகவளாகத்தில் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு

December 14, 2019 தண்டோரா குழு

கோவையிலுள்ள தனியார் வணிகவளாகத்தில் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு மற்றும் அதனை பதிவிறக்கம் செய்யும்முறையை பற்றி கோவை மாநகர காவல்துறை துறையினர் பெண்கள் மத்தியில் விரிவாக எடுத்துரைத்தனர்.

பெண்களின் பாதுகாப்புக்காக தமிழக காவல்துறை சார்பில் காவலன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.செல்போன் சிக்னல் இல்லாத இடங்களிலும் குறுஞ்செய்தி கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியை ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளில் பயன்படுத்த முடியும். இதன் ஒருபகுதியாக கோவையில் வணிகவளாகங்கள் மற்றும் கல்லூரிகள் என பல இடங்களில் செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று கோவை மேற்கு மாநகர காவல் துறை அதிகாரிகள், தனியார் வணிகவளாகத்திற்கு வரும் பெண்களுக்கு காவலன் செயலினை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அங்கு வரும் பெண்களின் செல்போன்களில் செயலியை பதிவிறக்கம் செய்தும் கொடுத்தனர்.

இதுகுறித்து ஆய்வாளர் கனகசபாபதி கூறும்போது,

இந்த செயலி முற்றிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறை அதிகாரிகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகர குற்றப்பிரிவு இணை ஆணையர் உமா,கோவை மாநகர மேற்கு சட்ட ஒழுங்கு துணை ஆணையர் ஸ்ரீராமாசந்திரன்,காவல் ஆய்வாளர்கள் கனகசபாபதி,பி ரபாதேவி,சாந்தி,பர்வீனா பானு உள்பட பலர். பங்கேற்றனர்.

மேலும் படிக்க