• Download mobile app
18 Oct 2025, SaturdayEdition - 3538
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு

March 29, 2017 தண்டோரா குழு

தில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் போராட்டம் நடத்த உள்ளதாக வந்த தகவலையடுத்து கோவை வ.உ.சி மைதானத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் சென்னை மெரினாவில் மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்த இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதையடுத்து சென்னை மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் அண்ணா சதுக்கம் வரையிலான பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மெரினாவில் போராட்டம் ஏதும் நடக்கவில்லை என்றும் வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மயிலாப்பூர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையிலும் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து கோவை வ.உ.சி மைதானத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க