• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையிலிருந்து 15 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த உதயநிதி ஸ்டாலின் !

November 24, 2018 தண்டோரா குழு

கோவையிலிருந்து உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களிலிருந்து 15 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை டெல்டா மாவட்டங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

கஜா புயலால் உருகுலைந்துள்ள டெல்டா மாவட்டங்களுக்கு திமுக சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றது. இதற்கிடையே, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பிலும் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் ரசிகர் மன்றம் சார்பில் 15 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, கோவை மாவட்ட தலைவர் சிவக்குமார், திருப்பூர் மாவட்ட தலைவர் சன் சுரேஷ், ஈரோடு மாவட்ட தலைவர் செல்வராஜ், கரூர் மாவட்ட தலைவர் செளந்தர்ராஜ், மதுரை மாவட்ட தலைவர் வினிஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க