November 3, 2020
தண்டோரா குழு
கோவையிலிருந்து தீபாவளி பண்டிகையை ஒட்டி கூடுதலாக 50 சிறப்பு விரைவு பஸ்கள் இயக்கம் கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது இதனையொட்டி கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்அதன்படி இந்த ஆண்டு கோவையில் இருந்து முதல் கட்டமாக 50 சிறப்பு அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து கோவை கோட்ட அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து சென்னை, நெல்லை, தூத்துக்குடி, கும்பகோணம், கன்னியாகுமாரி, ஓசூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 10 ஆம் தேதி முதல் 50 சிறப்பு விரைவு பஸ்கள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பஸ் இயக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.