August 23, 2018
தண்டோரா குழு
கோவையிலிருந்து சென்னை வரை 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரும் இயற்கை பேரிடர் நிகழப்போவதாக சித்தர் சாமி ராஜேந்திரன் கூறியுள்ளார்.
கோவையில் சித்தர் சாமி ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
நான் ஏற்கனவே சுனாமி, உத்திரகாண்ட், சென்னை வெள்ளம், கும்பகோணம் தீ விபத்து, மற்றும் கேரளா பேரிடர் உட்பட 12 அழிவுகளை முன்கூட்டியே சொல்லி இதுவரை நடந்துள்ளதாகவும் பேரிடர்கள் குறித்து முன்கூட்டியே அரசு மற்றும் பொதுமக்களுக்கு தெரிவித்தும் இதுவரை அலட்சியமாக இருந்ததால் மக்கள் அதிகளவில் இறந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோவையை மையமாக வைத்து வர இருக்கின்ற பேரிடரால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். இதனை தடுக்க தன்னால் மட்டுமே முடியும் எனவும், இது குறித்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தன்னை வந்து சந்தித்தால் பேரழிவை தடுத்து நிறுத்த முடியும் என்றார்.