• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையின் காவல் தெய்வத்தின் சித்திரை திருவிழா- ஏராளமான பக்தர்கள் திருவிளக்கு பூஜை வழிபாடு

April 21, 2023 தண்டோரா குழு

பிரசித்தி பெற்ற கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவையின் காவல் தெய்வம் என போற்றப்படும் அவினாசி சாலையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு மகா கணபதி ஹோமம்,சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில் இன்று பக்தர்களின் திருவிளக்கு பூஜை வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது.300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தொடர்ந்து வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.வரும் நாட்களில் அம்மன் திருக்கல்யாண உற்சவம், மஞ்சள் நீர்,சக்தி கரகம்,அக்னி தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சி என வரும் 30ஆம் தேதியுடன் தண்டுமாரியம்மன் சித்திரை திருவிழா முடிவடைகிறது.

மேலும் படிக்க