May 26, 2018
தண்டோரா குழு
கோவை மேட்டுப்பாளையத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளை ராட்சத பலூனில் பறந்தபடி இயற்கையை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் பச்சை பசைனு மரங்கள் சுத்தமான காற்று வீசும் சூழல் பகுதிகளை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சியில் மட்டுமே பார்க்க முடியும்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல வண்ணங்கள் கொண்ட ராட்சத பலூன் விளையாட்டு நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ஏர் பலூனில் இருந்தபடி பயணிகள் வானில் பறந்து இயற்கை காட்சிகளை ரசித்து வருகின்றனர்.இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை மற்றும் குளிர் பருவத்தில் சாகச விளையாட்டு திருவிழா நடைபெறுகிறது.
இதன் ஒருபகுதியாக அந்த பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள ரிசார்ட் மைதானத்தில் ஏர் பலூன் பறக்க விடப்பட்டுள்ளது. அங்கு செல்லும் பயணிகள் ஏர் பலூனில் பயணித்தபடி சுற்றியுள்ள இயற்கை காட்சிகளை ரசிக்கின்றனர். இந்த சாசக விளையாட்டு இந்திய விமானப்படையின் பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் அத்துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டும் நடத்தப்பட்டு வருகிறது.