• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவைபுதூர் பகுதியில் நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகள்

March 6, 2023 தண்டோரா குழு

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் காட்டு யானைகள் அவ்வப்போது உணவு தேடியும் குடிநீர் தேடியும் குடியிருப்பு பகுதிகளில் நடமாடுவதை காண முடிகிறது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் யானைகள் அவ்வப்போது பயன்படுகின்றன.

மாங்கரை ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானைகள் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் கோவைபுதூர் பகுதியில் நள்ளிரவு ஒரு மணி அளவில் 4 யானைகள் சுற்றித்திரிந்தன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பிரஸ் என்கிளேவ் நேற்று இரவு ஒரு மணி அளவில் 4 காட்டு யானைகள் உலாவந்தன. கூட்டமாக வந்த யானைகளைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

அந்த யானைகள் யாரையும் தாக்காத நிலையில் மீண்டும் வனப்பகுதிக்குள் சிறிது நேரத்தில் சென்று விட்டன.

மேலும் படிக்க