June 16, 2018
தண்டோரா குழு
கோவை குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால்,குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க 8வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிகிறது.தென் மேற்கு பருவமழை தொடங்கியது முதலே கோவை மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
மேலும்,கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதன் காரணமாக எட்டாவது நாளாக அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.