May 23, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடி போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு கோவை தமிழ் உணர்வாளர்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதையடுத்து காவல் துறையினர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர்.இந்த துப்பாக்கி சூட்டில் பத்து பேர் உயிரிழந்தனர்.மேலும் இன்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவையை அடுத்த டாடாபாத் பகுதியில் தமிழ் உணர்வாளர்கள் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, மவுன அஞ்சலி செலுத்தினர்.பொதுமக்கள் மீதான இந்த தாக்குதலை கண்டித்து,அனைத்து கட்சியினரை சந்தித்து முழு அடைப்பு போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.பொதுமக்கள் மீதான இந்த தாக்குதலை நிறுத்தி, ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.