June 18, 2018
கோவையில் துப்புரவு பணியாளர்கள் நிர்ணயம் செய்யப்பட்ட ஊதியத்தை வழங்கவும்,பணி நிரந்தரம் செய்யக்கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அனைத்து ஊராட்சிகள்,பேரூராட்சிகள்,நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு குறைந்த கூலி கொடுக்கப்பட்டு வருகிறது.நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவுப்படி ஊதிய உயர்வு வழங்காததைக் கண்டித்து,மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் இன்று முற்றுகையிட்டனர்.
மேலும்,3 ஆண்டுகள் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய,ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.