• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை:ஜேவி அகாடமி இலவச நீட் தேர்வு பயிற்சி முகாமில் 11 மாணவ மாணவிகள் தேர்ச்சி

June 5, 2018 தண்டோரா குழு

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு கடந்த மாதம் இந்தியா முழுவதும் நடைபெற்று அதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.இதில் தமிழகத்தில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கோவை அவினாஷி சாலையில் அண்ணா சிலை நிறுத்தம் அருகில் உள்ள ஜேவி அகாடமி மற்றும் இந்தியன் மெடிக்கல் அசோசியசன் இணைந்து ஒரு மாதம் இலவச நீட் தேர்வு பயிற்சி முகாமை நடத்தியது.ஏப்ரல் 3 ம்தேதி முதல் மே 5ம் தேதி வரை நடத்திய இந்த இலவச முகாமில் முப்பது மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் பதினோரு மாணவ மாணவிகள் மருத்துவ படிப்பிற்கான தேர்ச்சியும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் தேர்ச்சியும் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா ஜேவி அக்காடமி வளாகத்தில் நடைபெற்றது.

ஜே.வி அகாடமி தலைவர் வணங்காமுடி தலைமையில் விழா நடைபெற்றது.அப்போது அவர் பேசும் போது பல லட்ச ரூபாய் செலவு செய்து நீட் தேர்விற்கு படிக்கும் மாணவர்கள் மத்தியில் உண்மையான ஆர்வத்தோடு கலந்துகொண்டு முப்பது நாளில் தயார் செய்து தற்போது வெற்றி பெற்று இருக்கும் பதினோறு மாணவ மாணவிகள் மருத்துவ படிப்பிற்கு செல்கிறார்கள்.கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது சந்தோசமான விஷயம் என்றார்.தொடர்ந்து வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு ஜே.வி அகாடமி தலைவர் வணங்காமுடி கேடயங்களை வழங்கினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

எங்களது பயிற்சி மையம் ஆரம்பித்த முதல் ஆண்டிலேயே பதினோறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பிற்கு செல்வது மகிழ்ச்சியான ஒன்று என்றும்,இந்த ஆண்டு ஐம்பது மாணவர்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் நீட் தேர்வு பயிற்சி அளிக்க உள்ளோம் என்றார்.மேலும் ஜூன் 15 ம் தேதி துவங்கவுள்ள முதல் பயிற்சி முகாமில் 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க