• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவைக்கு விசிட் அடித்த பல்வேறு நகரங்களின் மேயர்கள்

December 16, 2023 தண்டோரா குழு

கோவையில் தேசிய அளவிலான ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்த கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.இதில் பங்கேற்கவும், கோவை மாநகராட்சியில் உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை பார்வையிடவும் ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், புவனேஸ்வர், பீம்பிரி சின்ஷவாட், பெங்களுர், ரூர்கேலா என 50 நகரங்களிலிருந்து மேயர்கள், ஆணையாளர்கள், மாநில உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கோவை வந்தனர்.

இந்த கருத்தரங்கு கோவை அவிநாசி சாலையில் உள்ள தி ரெசிடெண்சி ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார்.

கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கோவையில் நடைபெற்றுவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து பேசினார்.உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம்,முத்தண்ணன்குளம் உள்ளிட்ட 7 குளங்களில் நடைபெற்ற வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

கருத்தரங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குனர் குணால் குமார் பேசுகையில், இதுபோன்ற கருத்தரங்கம் கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக அறிந்துகொண்டு அவரவர் பகுதிகளில் செயல்படுத்தவும், அதேபோல் கருத்தரங்கில் பங்கேற்றுள்ள மற்ற நகரங்களை சேர்ந்தவர்கள் மூலம் அந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சிறப்பம்சங்களை தெரிந்துக்கொள்ள என பல வகைகளில் உதவுகிறது என்று பேசினார்.

நிகழ்வில் பங்கேற்ற பிற நகர அதிகாரிகள் உக்கடம் பெரியகுளம், ஐ லவ் கோவை செல்பி பாயிண்ட், ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் மற்றும் வாலாங்குளம் மேம்பாலத்தின் கீழ் உள்ள கட்டமைப்பு என ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை பார்வையிட்டு திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து அக்குழுவினர் அறிந்து கொண்டனர்.

மேலும் படிக்க