March 8, 2020
தண்டோரா குழு
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் கிரிக்கெட் பேட் தொலைந்த விவகாரம் இண்டிகோ விமான நிறுவனம் மன்னப்பு கேட்டது.
இந்திய கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கடந்த ஆறாம் தேதி மும்பையில் இருந்து கோவைக்கு இண்டிகோ விமானம் மூலம் வந்துள்ளார். அப்போது அவரின் கிரிக்கெட் பேட் இருந்த பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.இதுகுறித்து சமூக வலைதளமான ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ட்விட்டரில் தனது பேட்டை எடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது.
இதுகுறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிடம் ட்விட்ரில் மன்னிப்பு கேட்டுள்ள இண்டிகோ விமான நிறுவனம் உடனடியாக விசாரித்து தகவல் தெரிவிப்பதாகவும் விளக்கமளித்துள்ளது.