• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவைக்கு மாநில அரசு குறைவான தடுப்பூசிகளை ஒதுக்கி வருகிறது – வானதி ஸ்ரீனிவாசன்

May 28, 2021 தண்டோரா குழு

கோவைக்கு மாநில அரசு குறைவான தடுப்பூசிகளை ஒதுக்கி வருவதாகவும் கையிருப்பு தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தாமல் கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கவில்லை என குற்றச்சாட்டு வைத்து வருவதாக வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவை காந்திபுரம் பாஜக மாவட்ட அலுவலகத்தில் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக பரவி வருகிறது. இந்தியாவிலேயே ஒரு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 234 பேருக்கு கொரோனா பாதிப்பு என்பது அதிகம். கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கை வேண்டும். கோவை மாவட்டத்திற்கு கூடுதலான தடுப்பூசிகளை ஒதுக்கவேண்டும். தினசரி 30 ஆயிரம் தடுப்பூசிகளை போடும் அளவிற்கு மாநில அரசு தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும்.

அடுத்த பத்து நாட்களுக்கு இதை நிச்சயமாக பின்பற்ற வேண்டும் என மாநில அரசிற்கு வேண்டுகோள் விடுத்தார். மாநில அரசுக்கு மத்திய அரசு குறைவான தடுப்பூசிகளை அளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆனால் மாநில அரசு கையிருப்பில் வைத்திருக்கும் தடுப்பூசியை மக்களுக்கு கொண்டு செல்லாமல் தொடர்ந்து தடுப்பூசிகளை மட்டும் கேட்கிறது. கையில் இருக்கும் தடுப்பூசிகளை இரண்டு நாட்களில் மக்களுக்கு செலுத்த வேண்டும், ஆனால் அதை தவறவிட்டு கூடுதலாக ஊசிகளை மட்டும் கேட்கிறார்கள்.

மேலும் இந்தியாவிலேயே தமிழகம் தடுப்பூசிகளின் வீணாக்குவதில் மூன்றாவது இடத்தில் உள்ளது என குற்றச்சாட்டை வைத்தார். அதேசமயம் மத்திய அரசு வெளிநாடுகளிலும் உள் நாடுகளிலும் தடுப்பூசி தயாரிப்பில் தீவர கவனம் செலுத்தி வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அரசியல் செய்ய வேண்டாம் என பத்திரிகைகளில் குறிப்பிட்டு வருகிறார். ஆனால் மக்களுக்காக பணி செய்வதற்காக தான் நம் அரசியல் இருக்கிறோம் மக்கள் தேவையை பூர்த்தி செய்யுங்கள் அனைவரும் சேர்ந்தே அரசியல் செய்யலாம் என்ற பதிலையும் வானதி சீனிவாசன் வைத்தார்.

அதேபோன்று சமூக வலைதளங்களில் பாஜக வேட்பாளர்களுக்கு தல 13 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து அதில் பதில் கூற ஒன்றுமில்லை எனவும் தேர்தல் நேரத்தில் செலவுகள் குறித்து ஆணையத்திடம் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கேமராவுடன் அதிகாரிகள் பின் தொடர்ந்து கொண்டுதான் இருந்தார்கள் இதில் எந்த அளவுக்கு உண்மையில்லை என தெரிவித்தார்.

மேலும் தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து கூடுதலான ஆக்சிசனை பெற்றுள்ளோம் அதேபோன்று தடுப்பூசிகளையும் கூடுதலாக கேட்டுள்ளோம். நான் கோவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி எங்க மாவட்ட மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள் ஆகையால் தமிழகத்தில் ஒதுக்கு தடுப்பூசியில் கோவை மாவட்டத்திற்கென கொஞ்சம் கூடுதலாக தடுப்பூசிகள் ஒதுக்கவும் கோரிக்கையும் வைத்துள்ளோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க